ரேபிஸ் நோயினால் ஆண்டுக்கு 2000 பேர் மரணம்! எங்கு தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சீனாவில் ரேபிஸ் நோயினால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பதால், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பானது, சீனாவில் ரேபிஸ் நோயினால் ஆண்டுக்கு 2000 பேர் மரணமடைவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. நாயினால் பரவும் இந்த நோயினால் பலர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சீனாவின் பல இடங்களில் நாய் வளர்ப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது சீனாவின் தென் மேற்கு நகரான வென்சானில் பகல் நேரங்களில் நாய்களை வெளியே கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு மேலும், இரவு 10 மணிக்குள்ளும் நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்டுப்பாட்டில்தான் நாய்கள் வெளியே கொண்டுவரப்பட வேண்டும், நாய்களை 3 அடிக்கு குறைவான பிடியிலேயே கட்டி வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்து வென்சான் நகரைத் தவிர்த்து பல இடங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்