189 பேருடன் கடலுக்குள் விழுந்த விமானத்திற்கான காரணம் என்ன? தலைகுனிந்து நின்ற தலைவர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந்தனர்.

லயன் ஏர் விமான சேவையின் ஜேடி 610 எண் விமானம் 189 பயணிகளுடன் தலைநகர் ஜகார்தாவிலிருந்து கிளம்பிய 13 நிமிடத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில், பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தின் வேகத்தை சுட்டிக்காட்டும் கருவியில் கோளாறு இருந்தது விமானத்தின் கருப்புப் பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் அதிகாரிகளை பார்த்து,அவர்களின் கவனக்குறைவு குறித்து கோவமாக கேள்விகளை எழுப்பினர்,

லயன் ஏர் விமான சேவையின் தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு, உறவினர்களிடம் பதில் எதுவும் பேசமால் தனது கையை கூப்பி உறவினர்களின் முன் தலைகுனிந்து நின்றார்.

பயணிகளின் உறவினர்கள் தங்களின் அன்பிற்குரியவர்களின் உடல்களை பெற காத்திருக்கின்றனர் ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட உடல்களில் 14 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்