இறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கஜகஸ்தான் நாட்டில், இறந்த மாமனார் 2 மாதங்களுக்கு பின்னர் உயிருடன் வருவதை பார்த்த மருமகள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஜகஸ்தான் நாட்டில் ஜூலை 9ம் தேதியன்று 62 வயதான Aigali Supugaliev, டொமர்லி கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.

2 மாதங்கள் கழித்து அவருடைய வீட்டின் அருகில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தின் நகம் மற்றும் உடல்பாகங்களை வைத்து டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 99.92 சதவிகிதம் Aigali உடன் பரிசோதனை முடிவுகள் ஒத்துபோனதை தொடர்ந்து, உறவினர்களை அழைத்து இறுதிச்சடங்கினை நிறைவேற்றினர்.

இந்த நிலையில் 2 மாதங்கள் கழித்து திடீரென Aigali உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய மருமகள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்து தரையில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 4 மாதங்களாக நீண்ட தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் Aigali வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதுபற்றி Aigali சகோதரர் கூறுகையில், என்னுடைய சகோதரன் இறந்துவிட்டான் என மருத்துவர்கள் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டு என்னிடம் உறுதியாக கூறினார்கள். இறுதிச்சடங்கு மற்றும் சோதனைக்காக நான் அதிக பணம் செலவு செய்தேன். தற்போது நான் பணத்தை பற்றி கவலைப்படவில்லை.

ஆனால் டிஎன்ஏ சோதனை சரியாக கூறவில்லையே. நாங்கள் எரித்த நபரை அவருடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருந்தால் என்ன செய்வது என கூறியிருந்தார்.

இதுகுறித்து பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் கூறுகையில், டிஎன்ஏ சாத்தியக்கூறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு நபரின் உறுதித்தன்மையை கூற முடியாது. மீதமுள்ள 0.08 சதவிகிதத்தை மறக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்