அமெரிக்கா இதை செய்யாவிட்டால்..கடும் விளைவை சந்திக்கும்: வடகொரியா எச்சரிக்கை!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால், மீண்டும் அணு ஆயுத பாதைக்கு செல்வோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா மேற்கொண்டு வந்த அணு ஆயுத சோதனையினால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் கடும் மோதல் போக்கு நிலவியது.

அதன் பின் கடந்த ஜுன் மாதம் 12-ஆம் திகதி அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதால், இருநாடுகளுக்கிடையே இடையே இருந்த வார்த்தை போர் பின்னர் மாறியது.

இந்த சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை சந்தித்து பேச வேண்டும் என்று கிம் ஜாங் உன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதன் பின் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசினார். விரைவில் இரண்டாவது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கவில்லை.

அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்