அருவருப்பான உணவு வகைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அருவருப்பான, நாற்றமெடுக்கும் உணவு வகைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் இன்று Swedenஇல் திறக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளில் சிலர் விரும்பி உண்ணும் உணவு, வேறு சில நாடுகளில் உள்ளவர்களுக்கு அருவருப்பாக இருக்கலாம், உதாரணத்திற்கு துரியன் பழத்தைக் கூறலாம்.

அதேபோல் root beer எனப்படும் அமெரிக்க தயாரிப்பான மதுபானத்தை Swedenஇல் உள்ளவர்களுக்கு கொடுத்தால், அதை அவர்கள் துப்பிவிடுவார்கள்.

ஆக, உணவு என்பது நமது கலாசாரத்துடன் இணைந்தது, ஒருவருக்கு அருமையானது இன்னொருவருக்கு அருவருப்பாக இருக்கலாம் என்று கூறும் Dr. Samuel West, தோல்வியின் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.

ஆனால் அது பெயருக்கேற்றாற்போல் தோல்வியாக இல்லாமல் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பதால், பல்வேறு நாடுகளுக்கும் இந்த அருங்காட்சியகத்தைக் கொண்டு செல்லும் திட்டம் வைத்திருக்கிறார் அவர்.

அந்த அருங்காட்சியகத்தில் குட்டி எலிகளை அரிசி ஒயினில் ஊறவைத்து தயாரிக்கப்பட்ட எலி ஒயின், பாதி கரு உருவான நிலையில் வேகவைக்கப்பட்ட வாத்து முட்டை முதலான 80 வகை உணவுகள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சிலவற்றை பார்வையாளர்கள் சுவைக்கவும் நுகரவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்