பயங்கர நிலநடுக்கத்திற்கு மத்தியில் செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளர்: என்ன ஆனார் தெரியுமா? வெளியான வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், செய்தி வாசிப்பவர் ஒருவர் இது சின்ன நிலநடுக்கம் தான் அனைவரும் பீதிய அடைய வேண்டாம் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் Sichuan மாகாணத்தின் Xichang பகுதியில் கடந்த 31-ஆம் திகதி 5.1 ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தின் போது southwest China தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஒருவர், இது அவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஒன்றுமில்லை, சிறிய நிலநடுக்கம் தான் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஊழியர்கள் தொடர்ந்து அவரை வற்புறுத்திய பின்னரே அவர் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இவை அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த தொலைக்காட்சி நிர்வாகம், ஊழியர்கள் கூறியும் அவர் வெளியேறததால், அவரை எச்சரித்துள்ளது. ஏனெனில் முதலில் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறியுள்ளது. இதனால் அந்த செய்தி வாசிப்பாளர் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த வீடியோவைக் கண்ட சிலர் கிண்டல் செய்யும் விதமாகவும், ஒரு சிலர் இது ஒரு ஆபத்தானது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்