ஜப்பானில் கண்ணுக்கு தெரிந்த தீவு திடீரென மாயம்: எங்கே போனது என பயத்தில் அதிகாரிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் இருந்த தீவு ஒன்று திடீரென்று காணமல் போயுள்ளதால், இது அந்நாட்டு அதிகாரிகளுக்கு பயத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா என்ற தீவு ஒன்று கடந்த 1987-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது எவ்வளவு பெரிய தீவு என்பது இன்று வரை சரியாக தெரியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அந்த தீவு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.4மீற்றர் அதாவது நான்கரை அடி உயரம் மேலே வந்துள்ளது. இது வடக்கு ஜப்பானின் ஹொக்கய்டோ தீவிலிருந்து கண்களுக்குத் தெரிந்தது.

ஆனால் தற்போது அந்த தீவு காணவில்லை. இதனால் அந்த தீவு என்ன ஆனது? கடலில் மூழ்கிவிட்டதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

பூகம்பம், உள்ளிட்ட தீவிர காலநிலை மாற்றங்களினாலும் தீவுகள் காணாமல் போகும், ஜப்பான் ஜப்பான் எப்போதும் கடுமையான பூகம்பங்கள், சுனாமி என்று கடும் இயற்கைச் சீற்றங்களை, தேசியப் பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் நாடு என்பதால் காலந்லை மாற்றங்கள் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்தத் தீவு திடீரென மறைந்து போனதால் கடல் எல்லை விவகாரத்தில் ஜப்பானுக்கு சற்றே பின்னடைவு ஏற்படும் என்று ஜப்பான் கருதுகிறது.

தீவு காணாமல் போனால் என்ன என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அதன் கனிமவள ஆதாரங்கள் ஒரு தேசத்துக்கு முக்கியமானது, அந்த வகையில்தான் ஒகினோடோரி தீவுகளை தனிச்சிறப்பான பொருளாதார மண்டலமாக ஜப்பான் வைத்துள்ளது.

கடும் பூகம்பம் சுனாமிகளால் ஜப்பான் தன் தீவுப்பகுதிகளை இழந்தாலும் சில வேளைகளில் புதிய நிலப்பகுதிகளும் அவற்றுக்குக் கிடைத்துள்ளன. அப்படித்தான் கடந்த 2015-ஆம் ஆண்டு 300 மீற்றர் பரப்பளவுள்ள ஒரு நிலத்தொகுதி ஹொக்காடியோ தீவுப்பகுதியில் தோன்றியது.

இந்த நிகழ்வு புதிரான பூகம்ப நடவடிக்கையால் இருக்குமோ என்று பயந்தனர், ஆனால் நிலவியல் ஆய்வாளர்கள் நிலச்சரிவினால் நீருக்கு அடியில் இருக்கும் இது மேலே வந்திருக்கும் என்று கூறியுள்ளனர்.

மேலும் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த தீவு ஒன்று ஒரு சில கிலோ மீற்றார் நகர்ந்து சென்றதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers