சும்மா இருந்த சிங்கத்தை தொந்தரவு செய்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பூங்காவில் இருந்த சிங்கத்திடம் குடி போதையில் இருந்த நபர் கையை காண்பித்து தொந்தரவு செய்ததால், இறுதியில் அந்த நபர் சிங்கத்திடம் கடி வாங்கி உயிர் பிழைக்க கத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது,

மத்திய அமெரிக்காவின் Honduras நாட்டின் Tegucigalpa பகுதியில் இருக்கும் Rosy Walther விலங்கியல் பூங்காவிற்கு நண்பர்களுடன் சென்ற நபர் அங்கு கூண்டில் சும்மா இருந்த சிங்கத்திடம் தன்னுடைய கையை கூண்டின் உள்ளே காண்பித்து தொந்தரவு செய்துள்ளார்.

கூண்டின் உள்ளே இருந்த சிங்கம் அவரின் கையை கடிப்பதற்காக முன்னரே எழுந்து வந்தது. ஆனால் முதலில் தப்பிய அந்த நபர் அதன் பின், சிங்கத்திடம் சிக்கினார்.

வீடியோவை காண

இதனால் அவர் கையின் சிங்கத்தின் பற்கள் பதிந்துள்ளது. அதுமட்டுமின்றி கையில் இரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தற்போது அவரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் இல்லை, ஆனால் அவர் மது அருந்தியிருந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான வீடியோ காட்சியில், அந்த நபர் கையை உள்ளே கையை நீட்டும் போது, அவரின் பெண் நண்பர் வேண்டாம், சிங்கம் எழுகிறது, என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் இறுதியில் விளையாட்டு விபரீதத்தில் போய் முடிந்துள்ளது.

அந்த பெண் கூறுகையில், முதலில் நான் அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் இருந்தார். அதன் பின் அவரது கை சிங்கத்திடம் சிக்கிய போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்