சவுதி பத்திரிக்கையாளரின் சடலம் அமிலத்தில் கரைக்கப்பட்டதா?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

சவுதி பத்திரிக்கையாளரான ஜமால் கஷோக்ஜியின் சடலம் வெட்டப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படி நடந்ததற்கான சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரும், மூத்த துருக்கி அதிகாரியுமான யாசின் அக்டாய் தெரிவித்துள்ளார்.

மேலும் கஷோக்ஜியை கொன்றவர்கள், அடையாளம் ஏதும் இருக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹூரியத் டெய்லி பத்திரிக்கையில் பேசிய யாசின் அக்டாய், ஜமால் கஷோக்ஜியின் உடலை வெட்டி விட்டு அதை சாம்பலாக்கி இருக்கிறார்கள்.

அமிலத்தில் கரைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் உடல் பாகங்களை வெட்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்