நிபுணர்களின் துரித நடவடிக்கை: தடுக்கப்பட்ட மேலும் இரண்டு விமான விபத்து

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

189 பயணிகளின் மரணத்துக்கு காரணமாக விமான விபத்துக்கு பின்னர் இந்தோனேசிய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையால் மேலும் இரண்டு விமானங்களில் கோளாறு இருப்பதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 189 பேருடன் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அங்குள்ள அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த ஆய்வு நடவடிக்கை துரிதமாக நடைபெற்றுவந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இரண்டில் கோளாறு இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது இரண்டு விமான விபத்துக்கள் ஏற்படுவதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 11 விமானங்களில் ஆய்வு நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், குறை இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக தீர்வை எட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆய்வு நடவடிக்கையில் இடம்பெற்றுள்ள பிரித்தானிய நிபுணர் ஸ்டீபன் ரைட், மேக்ஸ் 8 ரக விமானங்களில் சாத்தியமான சிக்கல் இருப்பதாக சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விமானத்தின் உயரம் மற்றும் வேகத்தை காட்டும் கருவிகளில் சிக்கல் இருப்பதாகவும், இது மேக்ஸ் 8 ரக விமானங்களில் முக்கியமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டாலும், இதுவரை விமானத்தின் முக்கிய பகுதி மீட்கப்படவில்லை என கூறப்படுகிறது.

போயிங் மற்றும் அமெரிக்க போக்குவரத்து துறை நிபுணர்கள் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் தீவிர ஆய்வில் களமிறங்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்