15 பேர் மரணத்திற்கு காரணமான பெண்ணின் அதிர்ச்சி செயல்: நடுங்க வைக்கும் வீடியோ வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
379Shares

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் விபத்துக்குள்ளான பேருந்தின் நடுங்க வைக்கும் காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குறிப்பிட்ட பகுதியில் பேருந்தை நிறுத்த தவறியதை கண்டித்து அதில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் சாரதியை கொடூரமாக தாக்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தமது கையில் இருந்த மொபைலை பயன்படுத்தி பேருந்து சாரதியை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

சம்பவத்தின்போது பேருந்தானது சோங்கிங் மாகாணத்தில் உள்ள யாங்சே ஆற்றின் மீதுள்ள பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தது.

இதனிடையே சாரதியின் கட்டுப்பாட்டில் இருந்து பேருந்து தறிகெட்டு பாய்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் ஒன்றில் மோதியதுடன் யாங்சே ஆற்றில் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சாரதியின் தவறான நடவடிக்கையாலையே பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.

ஆனால் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 48 வயது பெண்மணி ஒருவரின் செயலே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளதை பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஞாயிறன்று காலை 10 மணியளவில் நடந்தேறிய இந்த விபத்தில் இதுவரை 13 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் இருவர் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை அன்று ஆற்றில் இருந்து விபத்துக்குள்ளான பேருந்தை வெளியே எடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்