189 பேருடன் கடலில் விழுந்த விமானம்! அறிவு இல்லாத ஊழியர்கள்... பகீர் கிளப்பும் விமான நிறுவனங்களின் நிலை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

விமானங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினாலேயே இந்தோனேசியாவில் இதுவரை 45 விமான விபத்துக்கள் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில், இந்தோனேசியாவில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

கண்டறியப்படாத தொழில்நுட்பக் கோளாறு தான் விபத்துக்குக் காரணம் என்று லயன் ஏர் நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த விமான விபத்து மட்டுமல்லாது இதுவரை இந்தோனேசியாவில் 45 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

1997-ம் ஆண்டில் நடந்த அரசின் `கருடா' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்ததில் அதிகபட்சமாக 234 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்தில் இதுதான் அதிக உயிர்களைப் பலி கொண்ட விபத்து. இதற்கு அடுத்ததாக, சமீபத்தில் நடந்த லயன் ஏர் விபத்து ஆகும்.

உலகிலேயே உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகம் கொண்ட நாடுகளில் இந்தோனேசியாவுக்கு 5-வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு 3 கோடி பேர் விமானத்தில் பயணிக்கின்றனர். இதற்காக 60 விமான நிறுவனங்கள் இந்தோனேசியாவில் இயங்கி வருகின்றன.

சர்வதேச விமான நிறுவனங்களில் இந்தோனேசிய விமானங்கள் என்றாலே ஒருவித அச்சம் உண்டு. பாதுகாப்பில் இந்தோனேசிய விமான நிறுவனங்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டும் இருக்கிறது.

இதனால், ஐரோப்பிய நாடுகளுக்குள் இந்தோனேசியாவில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அரசுக்குச் சொந்தமான `கருடா' விமான நிறுவனத்துக்கும் தடை இருந்தது.

189 பேர் பலியான லயன் ஏர் நிறுவனமும் தடையைச் சந்தித்த நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது,

விமானப் பராமரிப்புக்குக் கூட முறையாக ஊழியர்களை நியமிப்பதில்லை. ஊழியர்களுக்கு முறையான அறிவும் இல்லை என்ற குற்றசாட்டும் முன்வைக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்