சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த கர்ப்பிணி பெண்.. குழந்தையோடு சென்ற வீடியோ: பெண் காசாளருக்கு குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதால், அங்கிருந்த பெண் காசாளர் அவருக்கு உதவிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

ரஷ்யாவின் Omsk மாகாணத்தின் Nazyvaevsk பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு 28 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார்.

சுமார் 25 நிமிடங்கள் ஷாப்பிங் செயத அவர், அதன் பின் அங்கிருக்கும் செக் அவுட் கவுண்டிற்கு வந்துள்ளார். அங்கு இருந்த காசாளர் பெண்ணிடம் தனக்கு திடீரென்று வயிறு வலிப்பதாகவும், குழந்தை பிறப்பதை போன்று உணருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் காசாளரான Elena Barsukova(35) என்ற பெண் உடனடியாக உதவிக்கு அங்கிருந்த மற்றொரு பெண் ஊழியரை அழைத்துள்ளார், அதன் பின் உடனடியாக அவசரசிகிச்சை பிரிவுக்கு தெரிவித்து விட்டு, அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவியுள்ளார்.

இந்த சம்பவம் எல்லாம் அடுத்த 11 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது. அவசர நேரத்தில் உதவிய Elena Barsukova-வுக்கு அந்த மார்க்கெட்டின் மேலாளர் பாராட்டியுள்ளார்.

தற்போது குழந்தை மற்றும் தாய் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயின் பெயர் மற்றும் விபரம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை, ஆனால் இது அவருக்கு 6-வது குழந்தை என்று உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்