தோண்ட தோண்ட கிடைத்த உடல்கள்! சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத சவ குழி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த போரைப் பயன்படுத்தி, தலைநகர் ராக்காவை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

அதன் பின்னர், அமெரிக்க கூட்டுப்படைகள் ஜனாதிபதியின் படைகளுக்கு ஆதரவாக களமிறங்கின. அவர்கள் நடத்திய வான் வழித்தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இது சர்வதேச அளவில் கண்டனத்திற்குள்ளானது. இந்த தாக்குதல்களில் பலியான ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், தலைநகர் ராக்காவில் ராட்சத சவ குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் இதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ராக்கா நகரில் 85 சதவிதம் அழிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Reuters

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்