திருமணமான சில நாட்களில் கணவரின் பணம் மற்றும் சொத்துக்களுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

திருமணம் முடிந்த சில நாட்களில் கணவரின் பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்து கொண்டு ஓட்டம் பிடித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் சாரா. இளம் பெண்ணான இவருக்கு அவரை விட அதிக வயது மூத்தவரான குள்ள மனிதருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. பணத்துக்காக இவ்வாறு சாரா திருமணம் செய்து கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.

அதே சமயத்தில் வயதானவரை திருமணம் செய்து கொள்கிறோமே என்ற கவலையில் மணப்பெண் சாராவின் முகம் வாடிய நிலையில் இருந்ததும் தெரிந்தது.

ஆனால் திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் சாரா மகிழ்ச்சியாக தேனிலவு சென்று வந்தார்.

இதன்பின்னர் சாரா செய்த செயல் தான் பகீர் ரகம். தேனிலவு முடிந்த கையோடு கணவரின் பணம் மற்றும் சொத்துக்களை எடுத்து கொண்டு தலைமறைவாகியுள்ளார் சாரா.

இது அவரின் கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஓடி போன மனைவி சாரா குறித்து கணவர் புலம்பி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்