பத்திரிகையாளர் ஜமால் கொலை விவகாரம்: சவுதி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பத்திரிகையாளர் படுகொலையை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தியதாக சவுதி அரசு வழக்கறிஞர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் பத்திரிகையாளர் ஜமாலின் மாயமான உடல் பாகங்கள் தொடர்பில் உறுதியான தகவலை வெளியிட சவுதி மறுப்பு தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் கொலை தொடர்பில் சவுதி அரசு இதுவரை வெளியிட்டு வந்த தகவல்கள் அனைத்தும் இதனால் பொய் என உறுதியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சவுதி அரேபிய நாடுகளின் விசாரணை அதிகாரிகள் குற்றவாளிகளை விசாரணை செய்துவரும் நிலையில்,

சவுதி அரசு வழக்கறிஞர் அல் இக்பாரியா வெளியிட்டுள்ள இந்த கருத்துகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிலையில் சவுதி அரசு மீது சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் முதலில் தயங்கிய அமெரிக்கா பின்னர், சவுதி அரசாங்கத்தின் 21 முக்கிய அதிகாரிகளுக்கு விசா மறுப்பதாக அறிவித்தது.

இதனிடையே பத்திரிகையாளர் ஜமால் விவகாரத்தை சரிவர கையாளாத பட்டத்து இளவரசர் சல்மானை முக்கிய பொறுப்புகளில் இருந்து சவுதி அரசர் விடுவிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஜமால் கொலையில் பட்டத்து இளவரசரின் பெயர் முக்கிய ஊடகங்களில் வெளியான நிலையில், சவுதி அரசர் இந்த முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி ஜமாலின் விரல்களை வெட்டி இளவரசர் சல்மானுக்கு வெற்றிப் பரிசாக வழங்கியதாகவும், இளவரசர் சல்மானின் முக்கிய பாதுகாவலரே ஸ்கைப் மூலம் குறித்த படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தது என்ற தகவலும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்