பெருவெள்ளத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து: மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஜோர்டான் நாட்டில் பெருவெள்ளத்தில் சிக்கி பாடசாலை பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் அதில் இருந்த 17 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர்.

ஜோர்டானின் சாவுக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஜாரா மைன் என்ற கிராமத்தில் இந்த பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை ஒன்றில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று இந்த பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளது.

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த பெருவெள்ளத்தில் சிக்கிய 37 மாணவர்கள் மற்றும் 7 பெரியவர்களையும் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஜோர்டான் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை சிறப்பு அதிகாரிகள் குறித்த பகுதியில் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாணவர்களை தேடும் பணியில் படகுகளும் ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்