ஒரு வருடமாக இருந்த நெஞ்சுவலி: மருத்துவமனை சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் நெஞ்சு வலி என மருத்துவமனை சென்ற நபர், உணவுப்பாதையில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவை சேர்ந்த 26 வயதான சாங், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக, நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஒரு பந்தயம் கட்டியுள்ளார்.

அதில் இரும்புக் கரண்டியை விழுங்கிவிட்டு திரும்ப வெளியில் எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் உள்ளே விட்ட இரும்பு கரண்டி வெளியில் வரவில்லை.

இதனால் எந்தவித பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. உணவு எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பழக்கவழக்கங்களில் எந்த தடையும் ஏற்படாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி அதிகரித்துள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது உணவுக்குழாயில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சிடையடைந்துள்ளனர்.

உடனே அவசரமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மருத்துவர்கள், 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் எண்டோஸ்க்கோப்பின் உதவியுடன் கரண்டியை வெளியில் பிரித்தெடுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் கூறுகையில், ஆரம்பத்தில் கரண்டியை பார்த்து நாங்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்தோம். தற்போது அறுவைசிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக செப்டம்பர் 2015 இல் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 6 அங்குல கரண்டி நீக்கப்பட்டதும், அதேபோல ஜூன் மாதம் 2015 இல் ஒரு மாணவரின் வயிற்றில் இருந்து 5 அங்குல கரண்டி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்