13 வயதில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சிறுமி: சோக சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கவுதமாலா நாட்டில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, அதில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுதமாலா நாட்டின் Momostenango கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ்கா லோபீஸ் பெரேஸ் என்ற 13 வயது சிறுமி. இவர் தன்னுடைய 7 சகோதரன்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெரேஸ்க்கு, காட்டு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. மூன்று குழந்தைகளுமே 1 கிலோ எடையில் இருந்ததால், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அங்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. ஆனால் மற்றொரு குழந்தைக்கு தினமும் ஆக்சிஜன் தேவைப்படுவதால் மருத்துவன்மனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரிக்கையில், தெருவில் மிட்டாய் விற்பனை செய்யும் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ததாகவும், தற்போது அவர் யார் என்பது தனக்கு நியாபகம் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கர்பமடைந்திருப்பதே தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கவுதமாலாவின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய மையம், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை கர்ப்பமடைந்த 10 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 2,102 கர்ப்பிணிகளில் இதுவும் ஒன்று. இதே காலகட்டத்தில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட 59,584 இளம் பெண்கள்கர்பமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்