வைரல் வீடியோவால் பொலிஸிலிருந்து அரசியல்வாதியாக மாறிய பெண்: ஆச்சர்ய சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் துப்பாக்கியால் பொதுமக்களை மிரட்டிய ஒருவனை சுட்டுக்கொன்ற பெண் பொலிஸார் தற்போது பாராளுமன்ற அரசியல்வாதியாக மாறியுள்ள ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டில் ஆள் நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில், 21 வயதான வாலிபர் கையில் துப்பாக்கியுடன் ஒரு பெண்ணையும், குழந்தையையும் மிரட்டி கொண்டிருந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் சத்தமிட்டவாறு அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். ஆனால் அங்கு மாற்று உடையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியான கெடியா சாஸ்ட்ரே (45), தன்னுடைய கைப்பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு வாலிபரின் நெஞ்சில் இரண்டு முறை சுட ஆரம்பித்தார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் அடுத்த சில மணிநேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கெடியாவை தொடர்பு கொண்டு ஏராளமான பொதுமக்கள் பாராட்ட துவங்கினர். சாவ் பாலோவின் ஆளுநரும் தொடர்பு கொண்டு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்தார்.

ஏனெனில் பிரேசில் நாட்டில் அதிகமான கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு பிரச்சனையின் காரணமாக 63,800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில், கன்சர்வேடிவ் குடியரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தில் 35 ஆயுதப் படைகளின் வேட்பாளர்களில் ஒருவராக கெடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்