சிறுவயதிலே பிரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள்: 35 வருடங்களுக்கு பின் இணைந்த சுவாரஸ்ய சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஸ்யாவில் சிறுவயதிலே பிரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் 35 வருடங்களுக்கு பின்னர் சேர்ந்த சுவாரஷ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த Galina மற்றும் Vladimir Shilov என்ற தம்பதியினருக்கு கடந்த 1982ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதியன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

பின்னர் சில நாட்கள் கழித்து அவருடைய மகள் Ksenia உடல்நிலை சரியில்லாமல் மெலிந்து காணப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியை மற்றொரு பெண் தத்தெடுத்து சென்றுவிட்டார். அதேசமயம் மற்றொரு குழந்தையான Uliyana சொந்த பெற்றோரிடம் வளர்ந்து வந்துள்ளது.

இதற்கிடையில் Ksenia-வை வளர்த்து வந்த தாய், குழந்தையை ஒரு அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் ஒரு நாள் சாலையில் நடந்து சென்ற Uliyana-வின் தோழி ஒருவர், Ksenia-வை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து Uliyana-விடம் கூறியதும், சகோதரிகள் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு Ksenia-வை Uliyana வியந்து பார்த்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் இருவருக்கும் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவரும் ஒரே ரத்தப்பந்தத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய Shilov, Uliyana இனிமேல் எங்களுடைய குழந்தை. இனி வாழ்நாள் முழுவதும் அவள் எங்களுடன் தான் இருப்பாள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மருத்துவமனை மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, Ulyana, yana மற்றும் மற்றும் திரு, திருமதி ஷிலோவ் என ஒவ்வொருவருக்கும் £ 11,300 இழப்பீடு வழங்கவும், Ksenia-வுக்கு 13,600 பவுண்டுகள் வழங்கவும் உத்தரவிட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers