பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாலுள்ள பிரிட்டனின் தீவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நியூ பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 40 கிமீ ஆழத்தில் ஆழமாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாகவும் சுனாமி ஏற்பட போவதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் உயிர் சேதங்கள் குறித்து இன்னும் எந்தவொரு தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்