இறந்த தன்னுடைய நண்பனை நீண்ட நேரமாக எழுப்ப முயலும் நாய்: நெஞ்சை உருக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்த தன்னுடைய நன்பனை நீண்ட நேரமாக நாய் ஒன்று எழுப்ப முயலும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Quezon நகர பகுதியில் உள்ள சாலை ஒன்றில் பெண் நாய் ஒன்று அடித்து தூக்கி வீசப்பட்டது.

தலையில் பலத்த காயமடைந்ததால் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனை பார்த்த ஆண் நாய் ஒன்று தன்னுடைய வாய் மற்றும் காலை கொண்டு இறந்த நாயினை நீண்ட நேரமாக எழுப்ப முயன்றது.

அலுவலக பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த Jay Villanueva என்ற நபர் அதனை வீடியோவாக படமெடுக்க ஆரம்பித்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், சாலையில் செல்லும்போது ஒவ்வொரு வாகன ஒட்டியும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் சாலைகளில் திரியும் நாய்களுக்கு விதிகள் எதுவும் தெரியாது. சரியான பாதையில் தான் செல்கிறோமா என்பது கூட அவற்றிற்கு தெரியாது.

ஆனால் அவை அனைத்தும் நமக்கு தெரியும். அவைகளுக்கும் குடும்பம் ஒன்று இருக்கிறது. அதனை பார்க்கும்போதே என்னுடைய இதயம் சுக்குநூறாக நொறுங்கியது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers