தாய்லாந்து குகை மனிதனின் குகையில் பொலிசார் ரெய்டு: வெளியான முதல் வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பல பெண்களை தனது குகைக்கு வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாக சமூக ஊடகங்களில் ஜம்பம் அடித்துக் கொள்ளும் குகை மனிதன் தன் வாயாலேயே சிக்கிக் கொண்டான்.

Chatupoom Losir (48) என்னும் அந்த நபர் சமீபத்தில் ரஷ்ய பெண் ஒருவரை தனது குகைக்கு வரவழைத்ததைக் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டதோடு அவனது குகையில் நிர்வாணமாக உறங்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தான்.

அவனது முகநூல் பக்கத்தை ஆயிரக் கணக்கானவர்கள் பின் தொடரும் நிலையில், இந்த படம் பலரையும் முகம் சுளிக்கச் செய்தது.

அந்த ரஷ்யப் பெண்ணைத்தான் அவன் அவளுக்குத் தெரியாமல் படம் எடுத்து வெளியிட்டதாக கருதிய பலர் அவனை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்த பலரும் அவன் அநாகரீகமாக நடந்து கொள்வதாக பொலிசாரிடம் புகாரளித்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பொலிசார் Chatupoomஇன் குகையில் ஏதேனும் சட்ட விரோத விடயங்கள் நடக்கிறதா என்பதை அறிவதற்காக திடீரென ரெய்டு ஒன்றை மேற்கொண்டனர்.

ரெய்டுக்குப் பின் பேசிய பொலிஸ் அதிகாரிகள் Chatupoom எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று தெரிவித்தனர்.

ஆனால் பெண்கள் அவனது குகைக்கு செல்வது ஆபத்தானது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் அவன் தற்போது பொலிசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers