கொடூரமாக தாக்கிய சுனாமி... அலறி ஓடிய பொதுமக்கள்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட மோசமான சுனாமி தாக்குதலின் போது, கரைபுரண்டு ஓடும் நீர் பெருக்கிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உயிரை காத்துக்கொள்ளை சிதறி ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சிலாவேசி நகரத்தில் கடந்த மாதம் 29-ம் தேதியன்று 7.5 அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நகரமே சிதைந்தது காணப்பட்டது.

அதனை தொடர்ந்து 2-ம் தேதியன்று 20 அடி உயரத்தில் எழுந்த சுனாமி அலை நகரம் முழுவதையும் தாக்க ஆரம்பித்தது. இதில் அந்த நகரமே அடித்து செல்லப்பட, பொதுமக்களை அனைவரும் தங்களுடைய உயிரை காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை தேடி ஓட ஆரம்பித்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளதாகவும், 5000-க்கும் அதிகமான பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்கள் கடந்தாலும், இன்னும் அந்த நகரம் சோகமயமாகவே காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் சுனாமி தாக்க ஆரம்பித்த அன்று, பொதுமக்கள் அனைவரும் சிதறி ஓடும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers