காதலியின் அருகில் வந்த இறந்து போன காதலன்: திருமணநாளில் நெகிழ்ச்சி... மனதை உருக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த பெண் இறந்து போன தனது காதலருடன் இருக்கும்படியான புகைப்படத்தை லவ்விங் லைஃப் போடோகிராஃபி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் என்பவரும் தீயணைப்பு வீரரான கெண்டல் முர்பே என்பவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் கடந்த 29-ம் திகதி நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம், வேறொரு தீயணைப்பு வீரர் மது அருந்திவிட்டு கெண்டல் வாகனத்தை மோதியுள்ளார். இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக கெண்டல் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், இருவருக்கும் திருமணம் என முடிவுசெய்யப்பட்டிருந்த அன்றைய தினத்தில், அவரின் காதலி ஜெசிகா திருமண உடையணிந்தபடி தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருமண ஏற்பாட்டுடன் கெண்டலின் கல்லறைக்குச் சென்று, அங்கு மலர்கள் வைத்து தங்களின் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை லவ்விங் லைஃப் போடோகிராஃபி (Loving life Photography) என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் இருவருக்கும் எப்படி திருமணம் நடைபெற்றிருக்குமோ, அவ்வாறே புகைப்படமெடுத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் மனதை உருக்கும் விதத்தில் உள்ளது.

கெண்டல் பயன்படுத்திய ஷூவில் மலர்கள் வைத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம், ஜெசிகாவுக்கு அருகில் கெண்டல் புகைப்படம், அவரின் கல்லறையில் மண்டியிட்டு இருக்கும் ஜெசிகா, கெண்டலின் உடைகளுடன் இருக்கும் ஜெசிகா போன்ற புகைப்படங்கள் மனதைக் கனமாக்குகின்றன.

ஜெசிகாவுடன் நிழலாக அருகில் கெண்டல் நிற்கும் புகைப்படம் காண்போரின் கண்களை குளமாக்குகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers