தூக்கத்தில் மேலே விழுந்த பெண்ணுக்கு தொழிலதிபர் கொடுத்த தண்டனை! 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் தூக்க கலக்கத்தில் இருந்த பெண் தவறி மேலே விழுந்ததால், செல்போனை கொண்டு தொழிலதிபர் ஒருவர் அவருடைய முகத்தில் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் பக்கத்தில் இருந்த ஒரு தொழிலதிபரின் மீது சாய்ந்தவாறு இருந்துள்ளார்.

உடனே அந்த நபர் தன்னுடைய கைப்பையில் இருந்த போனை எடுத்து அந்த பெண்ணின் தலையில் அடித்துவிட்டு ஒன்றுமே தெரியாதவரை போல இருந்துகொள்கிறார். ஆனால் அந்த பெண் என்ன நடந்தது என தெரியாமல் முழிக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து 4 மில்லியன் பார்வையாளர்களையும் தாண்டி சென்றுவிட்டது. மேலும் 24 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களால் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவினை பார்த்த ஒரு சிலர் ஏன் இந்த வீடியோவினை பதிவிட்டீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த நெட்டிசன், வீடியோவில் இருக்கும் தொழிலதிபர் ஏற்கனவே 3 முறை அந்த பெண்ணை தாக்கிவிட்டார். அதன்பிறகு தான் நான் வீடியோ எடுத்தேன் என கூறியுள்ளார். இதற்கிடையில் வீடியோ பதிவானது பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்