இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட சுனாமி பேரலை: அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் பதிவான பூகம்பத்தை அடுத்து சுனாமி பேரலைகள் உக்கிரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அதிரவைக்கும் காட்சிகளானது சுலாவசி தீவின் பலு நகரில் பதிவானதாக கூறப்படுகிறது.

ஏறக்குறைய 2 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழும்பி வந்து கட்டிடங்களைத் தாக்கியுள்ளன. முன்னதாக சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் விலக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும், உறுதியான தகவல்கள் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சுனாமி பேரலைகள் பலு நகரின் குடியிருப்புக்குள் புகுந்து பெருத்த சேதம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியிருந்தாலும் பல குடியிருப்புகளில் இருந்து குடும்பங்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி பலு நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. பூகம்பம் ஏற்பட்டவுடன் சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் மக்கள் அனைவரும் மாலைநேர தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது.

இன்று பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதி என்பது பலு நகரத்தில் இருந்து 78 கி.மீ தொலைவில் மையம் கொண்டு தாக்கியது.

இந்தப் பூகம்பம் மத்திய சுலாவசி முதல் மகாசார் நகரம், காளிமந்தன் தீவு, போமியோ தீவு ஆகியவற்றிலும் உணரப்பட்டது.

பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் குறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்டுபோ புர்வோ நுக்ரோகோ கூறுகையில்,

நிலநடுக்கத்தில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன, ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. எத்தனைப் பேர் இறந்துள்ளனர், கட்டிடங்கள் சேதம் குறித்து இப்போது சொல்ல முடியாது.

மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers