அம்பலமான வருங்கால மனைவியின் தொழில்: இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் திருமணம் செய்துகொள்ளவிருந்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் இளைஞர் ஒருவர் இது கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.

தாம் திருமணம் செய்யவிருந்த இளம் பெண் பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த குறித்த இளைஞர் தொடர்புடைய இளம் பெண்ணை கத்தியால் தாக்கியது தொடர்பில் பொலிசார் கைது செய்திருந்தனர்.

தமது வருங்கால மனைவி ஒரு பாலியல் தொழிலாளி என அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் கத்தியால் அந்த இளம் பெண்ணின் காலில் தாக்கியுள்ளார்.

இதனிடையே தாம் பாலியல் தொழிலாளி என்பது வெளிச்சத்துக்கு வந்த ஆத்திரத்தில் குறித்த இளம் பெண் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

3 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த இளம் பெண்ணுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று வேலை நிமித்தம் குடியிருப்பு ஒன்றிற்கு செல்ல வேண்டும் என கூறிக்கொண்டு அவர் கிளம்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் இளம் பெண்ணின் தோழி ஒருவர் உண்மையை அந்த இளைஞரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்த இளம் பெண்ணின் முகவரியை தேடிப்பிடித்து குறித்த குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

திடீரென்று தமது வருங்கால கணவரை அந்த குடியிருப்பில் காண நேர்ந்த அவர், அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த இளம் பெண் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் இளைஞருக்கு மன்னிப்பு வழங்க கோரி அவரது உறவினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்