3-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: அடுத்து நடந்த அதிசயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளம்பெண்ணை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

சீனாவின் Anhui மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் தங்கியிருக்கும் அறையிலிருந்து திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவருடன் தீயணைப்பு படையினர் 30 நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, உடனடியாக ஒரு காலை வெளியில் விட்டு அந்த பெண் குதிக்க முற்படுகிறார்.

உடனே பக்கத்து வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு நீளமாக இரும்பு கம்பியை கொண்டு அந்த பெண்ணை வீட்டிற்குள் தள்ளும் முயற்சியில் மற்றொரு வீரர் ஈடுபடுகிறார்.

ஆனால் அந்த பெண் மீண்டும் குதிக்க முற்பட்டதால், உடனே தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் அந்த பெண்ணை உள்ளே தள்ளுகின்றனர்.

இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேசமயம் அவர் எதிர்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்