ஐநா கூட்டத்தில் பங்கேற்று வரலாறு படைத்த குட்டி தேவதை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து நாட்டின் பிரதமர், தன்னுடைய 3 மாத கைக்குழந்தையுடன் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்ட விடயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கூட்டத்தில் நெல்சன் மண்டேலா அமைதி மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டென் கலந்துகொண்டார்.

கடந்த ஜூன் மாதம் அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்த ஜெசிந்தா, அதற்கு நீவ் என பெயரிட்டார். இந்நிலையில், தனது 3 மாத கைக்குழந்தை நீவுடன் ஐ.நா கூட்டத்தில் இவர் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அவருடைய கணவர் கிளார்க் கேஃபோர்டும் இதில் கலந்துகொண்டார். இதனால் கிளார்க்கிற்கும், குழந்தைக்கும் ஐ.நா. சபை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதன்மூலம், ஐ.நா. மேடையில் கலந்துகொண்ட ‘நியூசிலாந்தின் முதல் குழந்தை’ என்ற பெருமை ஜெசிந்தாவின் குழந்தை நீவிற்கு கிடைத்தது.

கூட்டத்தில் ஜெசிந்தா தனது குழந்தையை அணைத்தவாறே பேசினார். இதனைக் கண்ட தலைவர்கள் மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் இருந்தனர்.

மேலும் குழந்தைக்கு தாயானாலும் நாட்டை ஜெசிந்தா சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மிக மிக இளம் வயதிலேயே குழந்தை நீவ் நாட்டின் தூதராக மாறிவிட்டதாக பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

AFP
AFP/GETTY IMAGES

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்