திருமணத்தின் போது சாக்குகளை திருமண ஆடையாக அணிந்து கொண்ட இளம்பெண்! என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் சிமெண்ட் சாக்குகளை திருமணம் ஆடையாக இளம் பெண் ஒருவர் அணிந்து கொண்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் கான்ஷு மாகாணத்தைச் சேர்ந்த 28 வயதான டான் லீலி என்ற பெண்ணின் தந்தை சிறுவயதிலேயே புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.

அதன் பிறகு பல வேலை செய்து குடும்ப பொறுப்பை தலையில் சுமந்த இவர், தனக்கென ஒரு வீட்டை கட்டிய பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்தார்.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வீட்டை கட்டி முடித்த இவர், சில நாட்களுக்கு முன் யங் மின் பை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு தான் கட்டிய வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 40 சிமெண்ட் சாக்குகளையே ஆடையாக அணிந்திருந்தார்.

மூன்றே மணி நேரத்தில் இந்த ஆடை தயாரிக்கப்பட்டதாகவும், இந்த ஆடையை பார்க்கும் போது எல்லாம் என் வீட்டின் ஞாபகம் தான் வரும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்