பர்தா அணிந்த பெண்ணை கட்டித்தழுவி சர்ச்சையில் சிக்கிய பொலிஸ்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

டென்மார்க்கில் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டியணைத்து பெண் பொலிஸ் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டென்மார்க்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் பொதுவெளியில் பர்தா அணிய கூடாது என உத்தரவிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பெண் பொலிசாரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் கண்ணீர் மல்க கட்டியணைப்பதை போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது.

இந்த புகைப்படம் இணையத்தில் பரவியதை அடுத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுபற்றி பேசிய எதிர்க்கட்சியினர், ஒரு பொலிஸார் தன்னுடைய பணியை தான் செய்ய வேண்டுமே தவிர போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டி தழுவுவது அல்ல என கூறினார்.

இதற்கு பதிலளித்த ஆளும் தரப்பினர், அந்த போராட்டத்தின் போது கட்டியணைக்க பெண் எந்த சூழ்நிலையில் இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவருக்கு உடல்நிலை ஏதேனும் சரியில்லாமல் இருந்திருக்கலாம். அதனால் அந்த பொலிஸார் ஆறுதல் கூற கட்டியணைத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஆளும் தரப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், பல்கேரியா மற்றும் ஜேர்மனிய மாநில பவேரியா ஆகிய நாடுகளில் பொது இடங்களில் முழு முகத்தை மூடிமறைக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்