தூக்கத்தில் அழுத குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்திய தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஸ்யாவை சேர்ந்த தாய் ஒருவர், காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது குழந்தை அழுததால் ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

ரஸ்யாவை சேர்ந்த Adelina Khairnasova, நேற்றைய தினம் தன்னுடைய காதலன் மற்றும் பெண் தோழியுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அந்த சமயம் மூன்று பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் இருந்த அறைக்கு பக்கத்து அறையில் Adelina-வின் 8 மாத குழந்தை Tolik உறங்கி கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து Adelina தன்னுடைய காதலனுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார். அப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த Tolik அழ ஆரம்பித்துள்ளான். இதனால் எரிச்சலடைந்த Adelina, கத்தி ஒன்றினை எடுத்துக்கொண்டு குழந்தையின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த Adelina-வின் தோழி, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து மருத்துவனை நிர்வாகம் கூறுகையில், குழந்தை தற்போது தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆழமான காயங்கள் எதுவும் ஏற்படாததால், உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. விரைவில் குழந்தை குணமடைந்துவிடும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட Adelina-விடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பேசிய Adelina, என்னுடைய காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் நான் ஏற்கனவே கோபமாக இருந்தேன். இதற்கிடையில் குழந்தை அழுததால் எனக்கு இன்னும் கோபம் அதிகரித்துவிட்டது. அந்த ஆத்திரத்தில் தான் அப்படி செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்