சர்க்கஸ் நிகழ்ச்சியில் நடந்த சோக சம்பவம்: மனதை உருக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில், திடீரென புலி ஒன்று நிலைகுலைந்து துடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் Magnitogorsk பகுதியில், பொதுமக்கள் கூட்டத்திற்கு நடுவே சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6 புலிகளை வைத்து Artur Bagdasarov மற்றும் அவருடைய சகோதரி Karina மக்களுக்கு வேடிக்கை காட்டி கொண்டிருந்தனர்.

அப்போது 6 வயதான Zena, திடீரென நிலைகுலைந்து துடித்துக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அது நடிப்பதாக நினைத்துக்கொண்டு அதன் உரிமையாளர் Artur நீளமான குச்சியினை கொண்டு அதனை எழுப்ப முயற்சி செய்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அது எழாமல் துடித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் பலரும் சோகமடைந்தாலும், ஒரு சிலர் அதுவும் ஒரு வித்தை என நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் புலியின் நிலை மோசமாவதை உணர்த்த Artur, உடனடியாக இசையை நிறுத்த உத்தரவு கொடுத்தார். மேலும் தண்ணீரை புலியின் மீது பீய்ச்சி அடித்து எழுப்ப முயற்சி செய்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் சோகமாக மாறினார். ஒரு வழியாக நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் புலி எழுந்து நின்றது. இதனை பார்த்ததும் அரங்கமே கைதட்டி உற்சாகப்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து Karina கூறுகையில், சர்க்கஸ் அரங்கில் என் சகோதரன் முடிந்தவரை Zena-வை எழுப்ப முயற்சி செய்தார். விலங்குகளை பொறுத்த வரை, எந்த விலங்கு பலவீனமாக காணப்படுகிறதோ அந்த விலங்கினை மற்ற விலங்குகள் தாக்க ஆரம்பித்து விடும்.

இதனால் என்னுடைய சகோதரன் ஒரு புறம் Zena-வை எழுப்ப முயற்சிக்கும்போது, நான் மற்ற புலிகள் சண்டையிடாமல் பார்த்து கொண்டேன். ஒருவேளை அங்கு எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால், அங்கு அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்திருப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers