அம்மாவால் 137 அடி உயரத்தில் உயிருக்கு போராடிய சிறுவன்: திக் திக் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் திருவிழா கொண்டாட்டத்தின் போது உயரமான ராட்டினத்தில் சிக்கி சிறுவன் உயிருக்கு போராடும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

சீனாவின் Zhejiang மாகாணத்தை சேர்ந்த Liu என்ற தாய் தன்னுடைய மகன் Xiao Liang-உடன் Yuhuan பூங்காவில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்த மிகப்பெரிய ராட்டினத்தில் சுற்ற அவருடைய மகன் ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து அவனை ராட்டினத்தில் ஏற்றிய தாய், £3-வை மிச்சப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு மகனை மட்டும் தனியாக அனுப்பியுள்ளார்.

ராட்டினம் சுழல ஆரம்பித்ததும், பயந்துபோன சிறுவன் அதிலிருந்து வெளியில் குதிக்க முயற்சி செய்துள்ளான். இதனை பார்த்த சிறுவனின் தாய் உடனே ஆப்ரேட்டரிடம் தகவல் கொடுத்துள்ளார். உடனே அவரும் ராட்டினத்தை நிறுத்த 137அடி உயரத்தில் சிறுவன் தத்தளித்துள்ளான்.

உடனே ஆபரேட்டர் மெதுவாக ரத்தினத்தை சுழற்றி தரைக்கு கொண்டுவந்து சிறுவனை மீட்டனர். இந்த சம்பவத்தில் சிறுவனின் கழுத்து பகுதியில் லேசான காயங்கள் மற்றும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த பெண் ஒருவர் கூறுகையில், அந்த சிறுவன் பயந்து கொண்டு முதலில் காலை வெளியில் நீட்டினான். உடனே அவனுடைய உடல் முழுவதும் ராட்டினத்தை விட்டு வெளியில் வந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவனுடைய தலை மட்டும் கம்பியின் இடுக்குகளில் சிக்கி கொண்டது என தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்