பெற்ற குழந்தையின் உடலை 5 ஆண்டுகளாக உண்டியலில் வைத்திருந்த பெண்: அதிரவைக்கும் காரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 ஆண்டுகளாக உண்டியலில் வைத்து பாதுகாத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோவை சேர்ந்த பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துள்ளது.

இந்நிலையில் கணவர் இல்லாத அப்பெண்ணை வீட்டில் இருந்து காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக இறந்த குழந்தையை உண்டியல் ஒன்றில் வைத்து வீடு மாறி இருக்கிறார் அந்த பெண். பின் அந்த உண்டியலுடன் வாழவும் பழகியுள்ளார்.

மொத்தமாக ஐந்து வருடம் இப்படி அந்த பெண் உண்டியலில் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இதில் 4 முறை இவர் வீடு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது

அந்த குழந்தை இருக்கும் உண்டியல் தான் தனக்கு அதிர்ஷ்டம் என்று கருதியதாலேயே, சடலத்தை அதில் வைத்துள்ளார் அப்பெண்.

மேலும் தனக்கு இருப்பது எல்லாம் அந்த குழந்தை மட்டுமே, அதையும் இழக்க விரும்பவில்லை என்றும் நினைத்துள்ளார்.

தற்போது இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பொலிசார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...