சீனப் பெண்ணின் அழகிய தமிழ் பேச்சு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் சீன வானொலியின் தமிழ் பிரிவில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார் நிலானி என்றழைக்கப்படும் லி யுவான்.

அந்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், சமூக வாழ்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பேஸ்புக் மூலம் நேரலை செய்து ஆச்சரியமான விஷயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நேயர்களுக்குத் தமிழில் வழங்குகிறார்.

சீனப் பெருஞ்சுவர் பற்றிய தகவல்களைச் சரளமாகத் தமிழில் நிலானி பேசியது இணைய உலகின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோ சில நாட்களிலேயே இணையத்தில் வைரலானது.

மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து, ‘தன்னுடைய அழகான தமிழ்ப் பேச்சால் இந்தப் பெண் சீனப் பெருஞ்சுவரையே வென்றுவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பெண்ணின் தமிழ் பேச்சுக்கு ஏராளமான தமிழர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்