ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலி?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

நேபாளத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஹெலிகொப்டர் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.

சுமார் 20 மைல் தூரம் கடந்ததும், விமான நிலையத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தாடிங் - நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

எனினும் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் அப்பகுதி இருப்பதால், தொடர் மழையின் காரணமாக மீட்புபடையினர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என நேபாள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன, அதில் நோயாளி ஒருவரும் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்