ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை உயர்வு

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

ஜப்பானில் வடக்குப் பகுதி தீவான ஹெக்கைடோவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜப்பானில் ஹெக்கைடோ தீவில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இந்த நில நடுக்கத்தால் வீடுகள் பல சேதமடைந்தன. பலர் காணாமல் போகினர்.

மேலும் 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இதில் பலியானோர் 30 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தீவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்போது சீரமைப்பு பணி நடந்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில், "ஜப்பானில் ஹெக்கைடோ தீவில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 30 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தேடும் பணி நடந்து வருகிறது" என்று கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்