டிரம்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்: வடகொரியா ஜனாதிபதி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்.

அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா, சில மாதங்களாக அமைதி பாதைக்கு திரும்பியுள்ளது.

கடந்த யூன் மாதம் 12ம் திகதி அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் வரலாற்று சந்திப்பு நடந்தது.

இதன்போது அணு ஆயுதங்களை ஒழிக்க கிம் ஜாங்க உன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதற்கிடையே கடந்த 5ம் திகதி வடகொரியா ஜனாதிபதியை தென் கொரியாவை சேர்ந்த உயர் நிலைக்குழு சந்தித்து பேசியது.

அப்போது, அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் எனவும் கிம் ஜாங் உன் கூறியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து டிரம்ப் டுவிட்டரில், என் மீது நம்பிக்கை வைத்துள்ள கிம்முக்கு நன்றி, இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்