பெண்ணிடம் பிடுங்கித் தின்ற ஆண் சிங்கங்கள்: அபூர்வ வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பொதுவாகவே சிங்கக் கூட்டம் ஒன்றில் பெண் சிங்கம்தான் வேட்டையாடி ஆண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் இரை கொடுக்கும்.

அப்படிக் கொடுத்துவிட்டு மிச்சம் மீதியைத்தான் பெண் சிங்கம் உண்ணும்.

சில நேரங்களில் உணவு மீதி வராததால் மீண்டும் அது வேட்டைக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் Kruger National Park என்னும் வன விலங்குகள் பூங்காவில் ஒரு வித்தியாசமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

பசியால் வாடும் ஒரு பெண் சிங்கம் ஒரு விலங்கின் உடலை சாப்பிட முயல்கிறது. அப்போது அங்கு வந்த, அந்த சிங்கத்தின் கூட்டத்தைச் சேராத ஒரு ஆண் சிங்கம் அந்த பெண் சிங்கத்தின்மீது பாய்த்து அதைக் கீழே தள்ளி அதனுடன் சண்டை போடுகிறது.

அப்போது எங்கிருந்தோ இன்னொரு ஆண் சிங்கம் வர, இரண்டு ஆண் சிங்கங்களும் சேர்ந்து அந்த பெண் சிங்கத்தைக் குதறி எடுக்கின்றன.

ஒருவழியாக உதறித் தள்ளிவிட்டு எழும் அந்த பெண் சிங்கத்தை முறைக்கும் அந்த ஆண் சிங்கங்கள் பின், சாவகாசமாக சென்று அமர்ந்து அந்த இரையை உண்ண ஆரம்பிக்கின்றன.

உணவுக்காகத்தான் இந்த போராட்டம் என்னும் உண்மையை உணர்ந்து கொண்ட அந்த பெண் சிங்கம் அமைதியாக அங்கிருந்து நகர்கிறது.

பொதுவாக உணவுக்காக இவ்வித சண்டை ஏற்படுவதில்லை, அதுவும் இன்னொரு பெண் சிங்கத்திடம் ஆண் சிங்கங்கள் இவ்விதம் சண்டை போடுவதில்லை என்பதால், ‘தகுதியுடையவை வாழும்’ என்னும் சார்லஸ் டார்வினின் தத்துவப்படி உயிர் வாழ்வதற்காக விலங்குகள் எப்படியும் நடந்து கொள்ளும் என்பதையே இந்த சம்பவம் நிரூபித்துள்ளது என்பதால் இந்த வீடியோ ஒரு அபூர்வ வீடியோவாக கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்