விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகொப்டர்: 18 பேர் பரிதாபமாக பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்துள்ளனர்.

ஒரோமியா பகுதியில் வந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், உரிய விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு எத்தியோப்பிய ராணுவத்தின் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்