ஜெராக்ஸ் கடையில் 12 வயது மகளுக்கு நடந்த துயர சம்பவம்: வீடியோவை வெளியிட்ட தாய்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 வயது மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடிய இளைஞரை பிடித்து தருமாறு, அவரது தாய் சிசிடிவி வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Caloocan நகரத்தில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடையில், சில ஆவணங்களை பிரதி எடுப்பதற்காக தாய் ஒருவர் தன்னுடைய 12 வயது மகளை கடைக்கு அனுப்பியுள்ளார்.

அங்கு பிரதி எடுக்கும் வரை அந்த சிறுமி காத்திருக்கும் போது, அருகாமையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர், ஆள் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து சிறுமியின் உதட்டில் முத்தமிடுகிறார்.

வீடியோவை காண...

இதனால் அதிர்ச்சியைந்த சிறுமி உடனடியாக அவனை தள்ளவிட, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். உடனே கடையில் வேலை செய்யும் பெண்ணும் அந்த இளைஞரை யாரவது பிடியுங்கள் என கூச்சலிடம் யாரும் கவனிக்காததால் அவன் தப்பி ஓடியுள்ளான்.

இந்த சம்பவம் நடந்ததிலிருந்து சிறுமி அழுதுகொண்டேயிருப்பதை பார்த்த தாய் உடனடியாக நடந்தவற்றை விசாரித்து காவல்நிலையத்தில் பாகர் அளித்தார்.

ஆனால் காவலர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாய், நடந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, வீடியோவினை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, விரைவில் குற்றவாளியை பிடித்து தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என நகர செயலாளர் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்