மார்பகத்தை அழகாக்க அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு கண்விழித்தபோது காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் மார்பக அறுவை சிகிச்சை செய்வதற்கு சென்ற பெண்ணை அறுவை சிகிச்சை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Erika Bykov என்ற பெண்மணி, மருத்துவர் Yury Chernikov - யிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்வதற்கு சென்றுள்ளார், அங்கு, இவருக்கு anaesthetic கொடுக்கப்பட்டு மயக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

மயக்கநிலையில் இருந்தபோது, மருத்துவர் இப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை தன்னால் உணரமுடிந்தபோது அதனை தடுக்க இயலாத நிலையில் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

Erika Bykov கூறியதாவது, அவர் என்னை பாலியல் வன்புணர்வு செய்ததை என்னால் உணரமுடிந்தது. ஆனால் அவரை தடுக்கும் அளவுக்கு நான் முழுசுயநினைவில் இல்லை.

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்ததையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மருத்துவர் அளித்துள்ள விளக்கத்தில், அப்பெண்ணின் சம்மதத்தின் பேரிலேயே இவை அனைத்தும் நடந்தது.

நான் இவ்வாறு செய்யும்போது அவர் என்னை தடுக்கவில்லை. நான் இவ்வாறு செய்தது தவறுதான் என்பதை ஒத்துக்கொள்கிறேன். இதனால் எனது குடும்பத்தினர் முன்னிலையில் தலை குனிந்து நிற்கிறேன் என கூறியுள்ளார்.

மருத்துவர் மீதான தண்டனை நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்