வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அபாயகரமான சுனாமிக்கு வாய்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வெனிசுலா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அபாயகரமான சுனாமி பேரலைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலாவின் வடக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 என பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து 300 கி.மீ சுற்றளவில் சுனாமி தாக்கலாம் எனவும், இது மிகவும் அபாயகரமானதாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் Grenada மற்றும் Trinidad and Tobago பகுதிகளிலும் சுனாமி தாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மட்டுமின்றி கொலம்பிய நாட்டு மக்களும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.

அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கமானது Margarita, Maracay, Vargas, Lara, Tachira, Zulia, Maturin மற்றும் Valencia உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்