திருமணம் முடிந்த அடுத்த நாள் புகைப்படம் எடுப்பதற்காக சென்ற ஜோடி! அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை, புதுப்பெண்ணான செவிலியர் காப்பாற்ற போரடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Liaoning மாகாணத்தின் Wafangdian பகுதியில் கடந்த 18-ஆம் திகதி திருமணம் முடிந்த தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென்று விபத்து ஏற்பட்டதால், சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிருக்கு போராடியுள்ளார்.

இதைக் கண்ட அந்த புதுமணத் தம்பதியின் பெண் உடனடியாக ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அதற்காக அவரின் வாயில், வாயை வைத்து ஊதியுள்ளார், அதன் பின் அவரின் நெஞ்சுப் பகுதியில் கையை வைத்து அழுத்தியுள்ளார்.

இதையடுத்து அங்கு ஆம்புலன்சுடன் விரைந்து வந்த பொலிசார், விபத்தில் சிக்கிய பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அப்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், கடந்த 17-ஆம் திகதி Xie Dan என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக குறித்த பகுதிக்கு வந்திருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செவிலியரான Xie Dan அந்த பெண்ணைக் காப்பாற்ற முயன்றார். இருப்பினும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பரவியதால், அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்