ராணுவ வீரர்களின் மன உறுதிக்காக ஆபாச நடன நிகழ்ச்சி: சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தென்கொரிய ராணுவீரர்களின் மனஉறுதியை அதிகரிக்கும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், இளம்பெண் ஒருவரின் ஆபாச நடனமும் இடம்பிடித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அதிகப்படுத்தும் விதமாகி தனியார் நிறுவனம் ஒன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் ஏராளமான ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் திடீரென ஆபாசமாக தோன்றிய, 21 வயது பெண் பிட்னஸ் மாடல் நடனமாட ஆரம்பித்தார். அந்த பெண்ணிடம் ராணுவ வீரர்கள் சிலரும் ஆபாசமாக பேசியுள்ளனர். இந்த வீடியோ காட்சியினை சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் கடந்த 15-ம் தேதியன்று யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளது.

வீடியோ வெளியிடப்பட்ட சில மணிநேரங்களில் அதிகளவிலான பார்வையாளர்களை வீடியோ கடந்தது. இதற்கு ஒரு சிலர் வரவேற்பு கொடுத்தாலும், தென் கொரியாவை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாகவே ஆபாச நடனம் இடம்பெற்றது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம் என ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்