அன்று பல ஆண்களால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் இன்றைய நிலை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் தற்போது அதிலிருந்து மீண்டு வந்த தனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே போர் உச்சத்தில் இருந்தபோது, அப்பாவி மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குறிப்பாக பெண்கள் மீதா பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.

அதுவும், யாஸிதி இன பெண்களை கடத்தி சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட Nadia Murad, 3 மாதங்கள் தீவிரவாதியின் பிடியில் இருந்துள்ளார்.

மொசூல் நகருக்கு என்னை கொண்டு சென்றார்கள், அங்கே 150க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும் அறையில் என்னை அடைத்து வைத்தனர்.

தினமும் இரவு பகல் பாராமல் எத்தனையோ தீவிரவாதிகள் வந்து என்னை தொடர்ந்து கற்பழித்தனர்.

மூன்று மாதங்களாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்த பின், அங்கிருந்து அகதிகள் முகாமுக்கு தப்பி வந்தேன் என இவர் தனது நேர்ந்த கொடுமையான நிகழ்வு குறித்து ஐநாவில் பேசியுள்ளார்.

அதிலிருந்து மீண்டு வந்த இவர், யாஸிதி பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதற்கான விழிப்புணர்வையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், தனது துயரமான காலங்களில் தனக்கு ஆதரவாக இருந்த நபரை திருமணம் செய்துகொண்டார். Abid Shamdeen என்பவரும் யாஸிதி பெண்களுக்கு ஆதரவாக போராடி வருகிறார்.

இதன் மூலம் தான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து தற்போது திருமணம் செய்துள்ளனர். இது எனது வாழ்வில் சிறப்பான தருணம் என Nadia கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்