பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரபல தயாரிப்பாளர், ஹாலிவுட் ஜாம்பவான் Weinstein மீது பாலியல் புகார் கூறியவர்களில் முதன்மையானவர் Argento என்ற நடிகை.

தனது மகனாக தன்னுடன் நடித்த ஒரு நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது ஒரு புகார் எழுந்த விடயம் தற்போது வெளியாகியுள்ளது.

Jimmy Bennett என்னும் அந்த நடிகர் 17 வயதாக இருக்கும்போது கலிபோர்னியாவிலுள்ள ஒரு ஹோட்டலில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jimmy யை விட 20 வயது மூத்தவரான இத்தாலி நடிகையான Argento அவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து தான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களைக் காட்டி அவரை மயக்கி அவருடன் பாலுறவு கொண்டதாக தெரிகிறது.

உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட Jimmy சார்பில் 3.5 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொரப்பட்டுள்ளது.

ஆனால் 380,000 டொலர்கள் கொடுத்து நீதிமன்றத்திற்கு வெளியில் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers